2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

நாமல்ஓயா குளம் சேதமடையும் அபாயம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அம்பாறை மாவட்டத்துக்கான விவசாய நீரை வழங்கும் நீர்த்தேக்கங்களில் ஒன்றான நாமல்ஓயா குளத்தைச் சூழவுள்ள மண்திட்டு அணை, நாளடைவில் மண்ணரிப்புக்குட்பட்டு சேதமடையும் அபாயம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 2,300 கிலோமீற்றர் நீளமுடைய இந்த மண் அணைக்கட்டு மிக நீண்ட காலத்திற்கு முன் அமைக்கப்பட்டதாகும்.

இப்பிரதேசத்தில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கு, மழை காரணமாக இந்த மண் அணைக்கட்டு, அரிப்புக்குள்ளாகி வருவதுடன் இதற்கான நிதந்தர தீர்வு இல்லாத காரணத்தினால் எதிர் காலத்தில் நாமல் ஓயா குளத்தில் சேகரிக்கப்படும் மழைநீர் வீணாக வடிந்தோடக்கூடிய நிலையொன்று உருவாகலாம் என அம்பாறை நீர்ப்பாசன பொறியியலாளர் ஆர்.எம்.பி கருணாரெட்ண தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X