Super User / 2010 செப்டெம்பர் 06 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
கல்முனை பொது நூலகத்திற்கு முன்னால் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பஸ் தரிப்பு நிலையத்தை அகற்றுவது தொடர்பான உத்தியோகபூர்வமான கடிதமொன்றை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பவுள்ளதாக கல்முனை மாநகர பிரதி மேயர் ஏ.ஏ.பஷீர் தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்டம் பிரதிமேயர் ஏ.ஏ.பஷீர் தலைமையில் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இன்றைய அமர்வின் ஆரம்பத்தில் கடந்த கூட்டத் தொடரின் தீர்மான்ங்கள் சபை செயளாலரால் வாசிக்கப்பட்டது.
அதன் பின்னர் கல்முனை பொது நூலகத்திற்கு முன்னால் சட்டவிரேதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பஸ் தரிப்பு நிலையத்தை அகற்ற வேண்டும் என கடந்த மாதம் நடைபெற்ற மாதாந்த அமர்வின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என சபை அங்கத்தவர்களால் ஏகமனதாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே பிரதி மேயர் ஏ.ஏ.பஷீர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
58 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago