Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க.சரவணன்)
சம்மாந்துறை, நெய்னாகாடு கல்லாற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கல்லாற்றில் இன்று காலை 7 மணியளவில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் ஆற்றில் சடலம் மிதப்படைக் கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலமானது அடையாளம் காண முடியாத வகையில் பழுதடைந்துள்ளதுடன் ஒரு சோடி செருப்பு மற்றும் உடைந்த நிலையிலான கைக்கடிகாரமொன்று போன்றன சடலத்துக்கருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்நிலையில் குறித்த சடலம் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
4 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
17 Jan 2026
17 Jan 2026