A.P.Mathan / 2010 ஒக்டோபர் 02 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஜதுசன்)
கடந்த புதன்கிழமை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற, 27 பேரினால் மட்டும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒரு திட்டமிட்ட செயல் எனவும், அரசியல் பின்னணியில் இடம்பெற்ற செயல் எனவும், குறிப்பிட்ட வைத்தியர் ஒருவரின் தவறை மறைப்பதற்காகவுமே ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது எனவும் ஆதார வைத்தியசாலையின் நலன்புரிச்சங்க உபதலைவர் ரி.சந்திரமோகன் தெரிவிக்கின்றார்.கடந்த கால சீர்கெட்ட நிருவாகத்தைவிட சீரான, திறமையான, அபிவிருத்திப்பாதையில் இட்டுச்செல்லும் நிருவாகமே இப்போது உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
ஆர்பாட்டம் நடந்த அன்றைய தினமே பொதுவைத்திய நிபுணர் (VP) ஒருவர் நியமிக்கப்பட்டார் எனவும், சிலநாட்களுக்கு முன் சுகாதார அமைச்சினால் ஒரு தொகுதி விலை உயர்ந்த உபகரணங்கள் கண் சத்திரசிகிச்சை பிரிவிற்கு வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எஸ்.ராஜேந்திரனிடம் கையளிக்கப்பட்டது எனவும் குறிப்பிடுகின்றார். அன்றுடன் ஒப்பிடும்போது இன்று பல தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி இரண்டரை வருடம் அதிகூடிய காலம் இவ்வைத்தியசாலையில் இப்பதவியில் இருந்த ஒரே ஒரு வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எஸ்.இராஜேந்திரன் எனவும் குறிப்பிடுகின்றார்.
இவ்வைத்தியசாலையை அழிவுப்பாதையில் இட்டுச் சென்றதனால் வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டவர்களினால் ஏற்பாடுசெய்யப்பட்டது இந்த ஆர்ப்பாட்டம். அவ்வாறு இடமாற்றப்பட்டவர்களில் ஒருவர்தான் வைத்திய நிபுணர் எஸ்.நிமலன். இவர் அம்பாறை பொதுவைத்தியசாலையில் வைத்திய நிபுணராக கடமையாற்றுகிறார். இவர் ஓர் அரசாங்க ஊழியர் என தெரிவிக்கும் ரி.சந்திரமோகன், அரச ஊழியர்களின் நடத்தை கோட்பாடுகளிலிருந்து அவ்வைத்தியர் விலகிச் செயற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகிறார். அதை ஆர்பாட்டம் நடைபெற்றபோது பெறப்பட்ட புகைப்படமும் ஊர்ஜிதப்படுத்துகிறது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குறித்த வைத்தியர், அரச வைத்தியசாலையில் கடமையில் இருக்கும்போதே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
29 minute ago
31 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
31 minute ago
50 minute ago
1 hours ago