2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

கிழக்கு மாகாண அஞ்சல் தின நிகழ்வு

Super User   / 2010 ஒக்டோபர் 17 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

136 ஆவது சர்வசேத அஞ்சல் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண அஞ்சல் தின நிகழ்வு அம்பாறை மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் என்.ரத்னசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அஞ்சல் மா அதிபர் எம்.கே.பி.திஸாநாயக்க, விசேட அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர மற்றும் அம்பாறை மாவட்டத் தபால் அத்தியட்சகர் கே.டபிள்யூ.எல்.ஜகத்குமார, இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து Kஒன்டனர்.

இந்நிகழ்வில் சிறந்த தபால், உப தபால் அதிபர்களாகத் தெரிவு செய்யப்பட்டோருக்கும், கோல உடை உத்தியோகத்தர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அத்துடன் சர்வசேத அஞ்சல் தினத்தினை முன்னிட்டு அஞ்சல் அலுவல ஊழியர்களுக்கிடையே நடத்தப்பட்ட விளையாட்டுப போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கப்படடன.  கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இந்நிகழ்வில் இடம்பெற்றன.


 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .