2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம்

Super User   / 2010 ஒக்டோபர் 18 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)   

சாய்ந்தமருது பிரதேச சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இக்கூட்டம் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தலைமையில் இடம்பெற்றது.

இங்கு உரையாற்றிய கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.நௌபர்,

சாய்ந்தமருது பிரதேசத்தில் நிகழும் சட்டவிரோத நடவடிக்கைகளை பொலிஸாருக்கு தெரிவிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பையும் உதவியினையும் சரியான  நேரத்தில் வழங்க முடியும்.

சிவில் பாதுகாப்பு குழுவில் சகல துறையை சார்ந்தவர்களும் அங்கத்துவம் வகிப்பதால் பல்துறைகளையும் சார்ந்த குற்றங்களை தடுப்பதற்கு உதவி புரியலாம்.

குற்றங்கள் புரிவோரின் தண்டனைகளை நீதிமன்றத்தில் குறைப்பதற்காக பிரதேச செயலங்கள் தோறும் மத்தியஸ்தர் சபைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றின் மூலமும் ஓரளவிற்கு தீர்வினை கண்டுகொள்ள முடியும் என பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.நௌபர் கூறினார்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .