2020 நவம்பர் 25, புதன்கிழமை

மாடுகள் வெட்டும் கழிவுகள் வீசப்படுவதால் மக்கள் அசௌகரியம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை இறைவெளிக்கண்ட சுனாமி வீட்டுத்திட்டத்துக்கு அண்மையில்லுள்ள வீதியில் மாடுகள் வெட்டும் கழிவுகளை இடுவதனால் அங்குள்ள குடியிருப்பாளர்கள் பல அசௌகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர்.


இறைவெளிக்கண்ட சுனாமி வீட்டுத்திட்டத்திலுள்ள 456 குடும்பங்கள் பயன்படுத்தும் வீதியிலிருந்து சுமார் 20 மீற்றர் தூரத்தில் இறைச்சிக்காக வெட்டப்படும் மாடுகளின் கழிவுகளை போடுவதனாலும் களஞ்சியப்படுத்துவதனாலும் அப்பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதுடன்இ நோய்கள் பரவும் அபாய நிலை காணப்படுவதாக அங்கு வாழ்கின்ற  மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


இது தொடர்பாக இந்த வீட்டுத்தின் கூட்டு ஆதன முகாமைத்துவ சபையின் அங்கத்தவர்கள் பல தடவைகள் கல்முனை மாநகரசபைக்கு முறைப்பாடு செய்தும் இன்று வரை எந்த நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை எனக்கூறி வேதனை அடைகின்றனர்.


இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகரசபையின் பிரதி மேயர் ஏ.ஏ. வஸீரிடம் கேட்டபோது, எங்களுக்கு இப்போதுதான் இந்தப்பிரச்சினை தெரியவந்துள்ளது.  இதற்குரிய நடவடிக்கையினை விரைவில் மேற்கொள்ளுவோம் எனக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .