2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

கிழக்கு மாகாண முன்பள்ளிகளின் பொருட்காட்சி

Super User   / 2010 நவம்பர் 07 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

கிழக்கு மாகாண முன்பள்ளிகளின் பொருட்காட்சியும், கலை நிகழ்ச்சிகளும் எதிர்வரும் 13ஆம்,14ஆம் திகதிகளில் அக்கரைப்பற்று ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் 12 கல்வி வலயங்களிலுள்ள முன்பள்ளிகளினால் தயாரிக்கப்பட்ட பொருட்காட்சிகளும், கலை நிகழ்ச்சிகளும்   நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் ஆரம்ப வைபவத்திற்கு அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.கே.யூ.கே.வீரவர்த்தன, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, இந்நிகழ்வின் இறுதிநாள் வைபவத்திற்கு அமைச்சர் ஏ.எல.ஏம்.அதாவுல்லா, மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை,  ஆகியோர் கலந்து கொள்ளள்ளனர்.

முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பொருட்காட்சி காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை இடம்பெறவுள்ளது.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .