2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

சுனாமியின் பேரழிவின் நினைவாக கல்முனையில் விசேட பிரார்த்தனை

Menaka Mookandi   / 2010 நவம்பர் 08 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 6ஆவது ஆண்டை நினைவுகூறும்முகமாக இந்த அனர்த்ததில் உயிர்நீத்தவர்களுக்கான து-ஆ பிரார்த்தனையும், கத்தமுல் குர்ஆன் பாராயண நிகழ்வும் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இஸ்லாமிய ஹிஜ்ரி கால அட்டவனையின்படி இன்று இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கல்முனை சீ ஸ்டார் சமூக சேவை அமைப்பின் அனுசரணையோடு நிகழ்த்தப்பட்ட இன்றைய நிகழ்வுகள் கடற்கரை பள்ளிவாசல் பேஸிமாம், மௌலவி அஸ்ஸெய்யிது கலீல் மௌலான தலைமையில் இடம்பெற்றன.

மேலும் இன்று மாலை கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முற்றவெளியில் இடம்பெறயிருக்கும் மார்க்க சொற்பொழிவு உட்பட ஏனைய மார்க்க நிகழ்வுகளில் இப்பிரதேசத்திலுள்ள மார்க்க அறிஞர்களும் பொதுமக்களும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--