2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

வறிய முஸ்லிம் சிறுவர்களுக்கு நிதி உதவிகள்

Super User   / 2010 நவம்பர் 09 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அம்பாறை மாவட்டத்தில் தந்தையை இழந்த வறிய முஸ்லிம் சிறுவர்களுக்கு அன்சார் சுன்னத்துல் முஹம்மதியா அமைப்பின் ஏற்பாட்டில் குவைத் நாட்டின் பைதுஸ் ஸகாத் நிதியுதவியின் கீழ் நிதி உதவிகள் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் புத்தாடைகள் வழங்கும் வைபவம் இன்று சம்மாந்துறை மர்கஸ் தாருல் ஈமான், தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா நிறுவனத்தின் கல்வி பிரிவுப் பொறுப்பாளர் கலாபூசணம் எஸ். செய்னுதீன் எஸ். பரீட் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 345  சிறுவர்களுக்கு நிதி உதவிகள் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் புத்தாடைகள் வழங்கி வைத்தார்.

இவ்வைபவத்தில் உலமாக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், பாதுகாவலர்கள், மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.


 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--