2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

முகாமைத்துவப் போட்டியில் அன்னமலை இரண்டாம் பிரிவு கிராமசேவை உத்தியோகத்தருக்கு முதலாம் இடம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 11 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கிடையே நடத்தப்பட்ட முகாமைத்துவப் போட்டியில் அன்னமலை இரண்டாம் பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர் பி.ஐ.அலெக்ஸ்சாண்டர் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.


பொதுநிர்வாக உள்நாட்டு அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடத்தி வரும் இம்முகாமைத்துவ போட்டியின்போது கிராமசேவை உத்தியோகத்தர்களின் அலுவலகம், சுற்றுப்புறச்சூழல், மக்களுடான தொடர்பு, திருப்திகரமான சேவை வழங்குதல், வினைத்;திறன் என்பனவற்றை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டது.


இப்போட்டியில் அன்னமலை இரண்டாம் பிரிவு கிராமசேவை உத்தியோகத்தர் பி.ஐ.அலெக்ஸ்சாண்டர் முதலாம் இடத்தினையும், சாளம்பைக்கேணி 5ஆம் பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.ஏம்;.நஜீம் இரண்டாம் இடத்தினையும், சொறிக்கல்முனை 2ஆம் பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர் என்.நடராஜா மூன்றாம் இடத்தினையும் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X