2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

கிட்டங்கி தாம்போதியின் பால நிர்மாண பணி மந்தகதியில்;பொதுமக்கள் விசனம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 14 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

கல்முனை நகரையும், நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்றக் கிராமங்களையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதியின் பால நிர்மாணப் பணிகள் மிகவும் மந்தகதியில் இடம்பெற்ற வருவதாக விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள், வாகன சாரதிகளும் விசனம் தெரிவிக்கின்றனர்.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் 18 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இப்பாலத்தின் நிர்மாணப்பணிகள் யாவும் ஒக்டோபர் 15ஆம் திகதியளவில் பூர்த்தியடையுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், இதுவரை 25 சதவீதமான நிர்மாணப்பணிகள் கூட நிறைவு பெறாத நிலையில் காணப்படுகின்றது.

தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பயணிக்கும் இவ்வீதியை தோண்டி தற்காலிக வீதி அமைக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் ஏற்படும் மழை,வெள்ளம் காரணமாக இவ்வீதி முற்றாக சேதமடையும் நிலை தோன்றியுள்ளதாகவும் பிரதேச விவசாயிகளும், பொதுமக்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, எதிர்வரும்  மழை காலத்திற்கு முன்னர் இப்பால நிர்மாணப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .