2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

நளீம் லதீபின் கற்பனையில் உருவாக்கப்பட்ட கலைக்கண்காட்சி

A.P.Mathan   / 2010 நவம்பர் 18 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

ஆறாம் சஞ்சிகையின் ஆசிரியரும், எழுத்தாளருமான மருதமுனை நளீம் லதீப் எனும் தனிநபரின் கற்பனையில் உருவாக்கப்பட்ட கலைக்கண்காட்சி இன்று மருதமுனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பரகத் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.பரீட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்த இக்கண்காட்சியில் கௌரவ அதிதியாக அல் மதீனா வித்தியாலய அதிபர் ஏ.ஆர்.நிஃமதுல்லா வருகை தந்திருந்தார்.

மேற்படி கண்காட்சியில், முருகைக் கற்கள், மரம், வீட்டுக் கழிவுகள் போன்றவைகளிலிருந்து ஆக்கப்பட்ட ஏராளமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு இக்கண்காட்சி தொடராக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--