2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

கல்முனையில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு கல்முனை பிரதேசத்தில் வீடு வீடாகச்சென்று டெங்கு நோய் விழிப்பூட்டும் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
 
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம்.பஸால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச கிராமமட்ட களஉத்தியோகத்தர்கள் போன்றோர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது  வீடு வீடாகச்சென்று விழிப்பூட்டல் மேற்கொள்ளப்பட்டதுடன் டெங்கு நோயின் அபாயகரம் தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--