2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு

Super User   / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதுடன்  அவை பயிருக்கும் குடியிருப்புகளுக்கும் பலத்த சேதத்தை விளைவித்துள்ளன.

இம்மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மை செய்கையின் மூலமாக தற்போது  நெற்பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டு யானைகள் வயல் நிலங்களுக்குள்ளும் அதனை அண்மித்த குடியிருப்பு பகுதியிலும் நுழைந்து நெற்பயிர்களை அழித்துள்ளதுடன் பிரதேசவாசிகளின் உடமைகளுக்கும் பலத்த சேதத்தை விளைவித்துள்ளன.

இறக்காமம் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட குடுவில், மாணிக்கமடு, வரிப்பத்தஞ்சேனை, நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நெல்லித்தீவு, தரவை,  பொத்துவில் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட செங்காமம், சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட புதிய வளத்தப்பிட்டி போன்ற இடங்களில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளமையினால் இரவு வேளைகளில் இப்பிரதேசங்களை சேர்ந்த மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சேர்ந்த மக்கள் பிரதேச செயலங்களினூடாக காட்டு யானைகளின் தொல்லைகளில் இருந்து தம்மையும் தமது உடமைகளையும் பாதுகாப்பதற்காக மின் வேலிகள் அமைத்துத்தருமாறு அம்பாறை மாவட்ட அரச அதிபர் சுனில் கன்னங்கராவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--