2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

புனரமைப்பு செய்யப்பட்ட விவசாய வாய்க்கால்கள் திறந்துவைப்பு

Super User   / 2010 டிசெம்பர் 16 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

ஐ. ஓ. எம் நிறுவனத்தின் நிதியில் நாவிதன்வெளி பிரதேச சபை பிரிவில் விவசாய வாய்க்கால்களை புனரமைப்பு செய்து விவசாயிகளினதும், மக்களினதும் பாவனைக்காக இன்று வியாழக்கிழமை  கையளிக்கும் வைபவம் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராஜா கலையரசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அதிதிகளாக கலந்து கொண்ட ஐ. ஓ. எம் நிறுவன சிரேஸ்ட திட்ட முகாமையாளர் மத்தியூ, மாவட்ட நீர்பாசன வலய பணிப்பாளர் ஏ.சி வீரசிங்க உள்ளிட்ட அதிதிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோர்கலந்து கொண்டதுடன், விவசாயிகளின் பாவனைக்காக  நீர் திறந்துவிடப்பட்டது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--