2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

நல்லெண்ண விஜயம்

Super User   / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(அப்துல் அஸீஸ்)

திறன் விருத்தி ஊடாக இன உறவுகளை கட்டியெழுப்புதல் எனும் தலைப்பிலான 4 நாள் பயிற்சிக்கான தரிசித்தல் வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான விஜயத்தை சம்மாந்துறை பிரதேச இளைஞர்கள் அண்மையில் மேற்கொண்டனர்.

சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த  கணபதிபுரம், மஜீட்புரம், வீரச்சோலை ஆகிய கிராமங்களை சேர்ந்த மூவின இளைஞர் யுவதிகளும் கலந்துகொண்ட இந்நிகழ்வானது  ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட நிதி உதவியின் ஊடாக, சமூக அபிவிருத்திக்கான முன்னெடுப்பு நிறுவனத்தினால் ஒழுங்கு  செய்யப்பட்டிருந்தது.


இந்த விஜயத்தின்போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட நிதி உதவியின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் தெல்லிப்பளை சுதந்திரபுரம் மற்றும்  மன்னார் தரவன்கோட்டை கிராம மக்களுடன் திறன் விருத்தி, இன உறவுகள் தொடர்பான விடயங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக்கள் இந்த இளைஞர், யுவதிகளுக்கு வழங்கப்பட்டன.

சுதந்திரபுரம் மற்றும் தரவண்கோட்டை கிராமங்கள் யுத்தத்தின் பின் சீரமைக்கப்பட்டு குடியேற்றப்பட்ட கிராமங்கள் என்பது குறிப்பிடப்பட்டது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--