2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

திறப்பு விழா

Super User   / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை பாத்திமாதுஸ் ஸஹ்றா மகளிர் அரபுக் கல்லூரியின்  கட்டிடத் திறப்பு விழா வைபவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

முஸ்லிம் பெண்களின் சமயக்கல்வியை மேலும் விருத்தி செய்யும் நோக்கோடும் க.பொ.த.சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரிட்சைகளை எழுதிய பெண் மாணவர்களுக்காக முற்றிலும் இலவசமான முறையில் மார்க்கக் கல்வியைப் போதிக்கும் நோக்கோடு கடந்த வருடம் 2009.10.26 ஆம் திகதி இக்கல்லூரி  ஆரம்பிக்கப்பட்டது.

இக்கல்லூரியில் ஒரு வருட கற்கை நெறியை பூர்த்திசெய்த 15 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் இவ்வாண்டு கற்கை ஆண்டை மூன்று வருடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்   40 புதிய மாணவர்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .