Super User / 2011 ஜனவரி 08 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம். ரம்ஸான், அப்துல் அஸீஸ்)
ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் தாக்கப்பட்டமையை கண்டித்து அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று சனிக்கிழமை காலை கல்முனையில் மாநகர சபைக்கு முன்னால் இடம்பெற்றது.
அமைதியான முறையில் இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர் பி.எம்.ஏ.காதர் தாக்கப்பட்டமையை கண்டித்தும் இனிமேல் ஊடகவியலாளர்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்ய கோரிய கோஷங்கள் எழுப்பப்ட்டன.
ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் என 100 மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளன தலைவர் மீரா எஸ்.இஸ்ஸடீன் மற்றும் அம்பாறை ஊடகவியலாளர் அமைப்பின் தலைவர் திலக் அபேயகோன் ஆகியோரினால் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேராவிடம் மஹஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதரை தாக்கிய கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.ஏ அமீர் நேற்று வெள்ளிக்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகி பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் பி.எம்.ஏ.காதர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
13 minute ago
17 minute ago
26 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
26 minute ago
40 minute ago