2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு தயாராகும் அம்பாறை மாவட்டம்

Super User   / 2011 ஜனவரி 08 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலுள்ள 19 உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலில் போட்டியிடவதற்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மாநகர சபை, அம்பாறை நகர சபை, சம்மாந்துறை, நிந்தவூர், பொத்துவில், நாவிதன்வெளி, அட்டாளைச்சேனை, காரைதீவு, திருக்கோவில், ஆலையடிவேம்பு, இறக்காமம், அக்கரைப்பற்று, மகாஓயா, தமன, பதியத்தலாவ, தெஹியத்துக் கண்டிய, நாமல்ஓயா, லகுகல மற்றும் உஹண ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

இத்தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் மக்கள் செல்வாக்குள்ள வேட்பாளர்களை தேடும் பணிகளை ஆரம்பித்துள்ளன.

தான் சார்ந்துள்ள அரசியல் கட்சியினூடாக தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்கள் இழக்கப்படுமானால் வேறு கட்சியில் அல்லது சுயேட்சை குழுவாக களமிறங்க தயாராகவுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பலர் போடடியிடவுள்ளனர்.

கடைசியாக நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் சம்மாந்துறை, நிந்தவூர், அட்டானைச்சேனை,பொத்துவில் ஆகிய பிரதேச சபைகளை முஸ்லிம் காங்கிரசும், அக்கரைப்பற்று பிரதேச சபையை தேசிய காங்கிரசும், காரைதீவு,நாவிதன் வெளி, ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேச சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அம்பாறை நகர சபை, உகண,தமன, மகாஒயா, பதியத்தலாவ, தெஹியத்துக்கண்டிய,லகுகல மற்றும் நாமல் ஓயா ஆகிய பிரதேச சபைகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் கைப்பற்றியிருந்தது.

இதேவேளை, அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் இறக்காமம் பிரதேச சபை என்பன புதிதாக உருக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .