Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 08 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
அக்கரைப்பற்று பிரதேச சபை மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டமையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரவேற்பதாக அக்கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிரதேச சபை மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டதையடுத்து அம்பாறை மாவட்டத்திற்குள் இரண்டு மாநகர சபைகள் உண்டு. இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் தென் கிழக்கு அலகு கனவு அமைவதற்கான அடித்தளமாகும் என அவா குறிப்பிட்டார்.
இதேபோன்று கரையோர மாவட்ட கோரிக்கையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் ஹசன் அலி கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா அவசரமாக அக்கரைப்பற்று பிரதேச சபையை மாநகர சபையாக தரமுயர்த்தியிருப்பது தேர்தலுக்கு முன்னர் அரசியல் இலாபம் தேடும் நடவடிக்கை என கபே அமைப்பு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த விதமான வர்த்தமானி அறிவித்தலுமின்றி மாநகர சபையாக பிரகடணப்படுத்தியிருப்பதாகவும் வரலாற்றில் முதற் தடவையாக பிரதேச சபையாக இருந்து மாநகர சபையாக நேரடியாக நடமுறைப்படுத்திப்பதியிருப்பதா கபே வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநகர சபை தேர்தலுக்காக கலைக்கப்படடுள்ள அக்கரைப்பற்று பிரதேச சபை அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் ஆட்சியிலிருந்தமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
9 hours ago
Dr. I.M. Javahir, Addalachenai Monday, 10 January 2011 03:32 PM
எது எவ்வாறாயிருப்பினும், மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமே.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
9 hours ago