2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

துரவந்தி மேடு கிராம மக்கள் வெளியேற முடியாமல் அவதி

Kogilavani   / 2011 ஜனவரி 10 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

கிழக்கில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக கல்முனை துரவந்தி மேடு கிராமத்தில் வாழும் 50 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் வெளியேற முடியாத நிலையில் உள்ளனர்.

கல்முனைக்கும் துரவந்திமேடு கிரமாத்திற்குமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால்,  தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள அம்மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இவர்களில்  53 பேரை நேற்று படகு மூலம் மீட்டுள்ளதுடன் எஞ்சியுள்ளவர்களை  இன்று மீட்பதற்கான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .