2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மழை

Super User   / 2011 ஜனவரி 11 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்)

தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக கல்முனை சாய்ந்தமருது பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்வோர் தொகை தொடர்ந்தும் அதிகரித்து கொண்டிருக்கின்றது.

சாய்ந்தமருது, கல்முனை பிரதேசங்களில் வெள்ளத்தினால் 16448 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் சுமார் 7000 இக்கும் அதிகமான குடும்பத்தினர் பாடசாலைகளிலும் உறவினர் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

தற்போது பிரதான வீதிகள் உட்பட அனைத்து வீதிகளிலும் போக்குவரத்து செய்ய முடியாது நிலைமை தோன்றியுள்ளது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் பாதிப்புகள் இன்னும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை கல்முனை மாநகர சபையின்; மேயர் காரியாலயத்தில் இன்று திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் தலைமையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான பிரச்சினைகள் ஆராயப்பட்டதோடு நீரை வடிந்தோட வைப்பதற்கான சகல நடவெடிக்கைகளையும்  எடுப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர மேயர் மசூர் மௌலானா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • aslam Wednesday, 12 January 2011 05:15 PM

    please help for all people to safe and i pray for allah nothing happan to again

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--