2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

அம்பாறை மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்களுக்கான செயலமர்வு

A.P.Mathan   / 2011 ஜனவரி 23 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள பாடசாலைகளில் கடமையாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான செயலமர்வொன்று இன்று சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஏ.எம்.முஸாதிக் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அம்பாறை மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர் ஏ.எல்.எம்.பாறூக் பிரதம அதிதியாகவும் கல்முனை வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஏ.ஏ.சத்தார், விரிவுரையாளர் எம்.எச்.எம்.மன்சூர், சம்மேளன உப தலைவர் எஸ்.அரசரெட்ணம், செயலாளர் எம்.ஏ.நபார், இணைப்பாளர் அலியார் பைஸர், அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி பீடாதிபதி ஏ.எல்.றஸுல் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டதுடன் வவுனியா கல்வியல் கல்லூரி உப பீடாதிபதி ரீ.எம்.தேவேந்திரன் விரிவுரைகளையும் நிகழ்த்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X