2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் சாரதி காயம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 25 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

நிந்தவூர் பிரதேசத்தின் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனமொன்றுக்குச் சொந்தமான வாகனம் கடுமையான சேதத்துக்குள்ளானதோடு, அதன் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.

வேகமாகப் பயணித்த குறித்த வாகனம் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றின் பின்புறத்தில் மோதியதையடுத்து இவ்விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதி அகலமாக்கப்பட்டு, காபட் வீதியாக மாற்றம் பெற்ற பின்னர் இவ்வீதியில் வாகன விபத்துகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--