Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாலமுனை சிறிய கண்டம் பகுதியில் முற்றாக சேதமடைந்த பிரதான வீதி இன்னமும்; திருத்தப்படாமையால் அப்பகுதியினூடாக போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
வெள்ளத்தின்போது மேற்படி வீதி உடைப்பெடுத்ததால், அப்பகுதியிலுள்ள பல நூற்றுக்கணக்கான நெல்வயல்கள்; நீரில் மூழ்கி அழிவடைந்தன.
இருப்பினும் எஞ்சிய தமது நெல்வயல்களை அறுவடை செய்ய வேண்டிய விவசாயிகள் இந்த வீதியூடாக பயணிப்பதிலும் அறுவடை செய்யப்பட்ட நெல்லைக் கொண்டு வருவதிலும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
எனவே, உரிய அதிகாரிகள் உடனடியாக இந்த வீதியை புனர்நிர்மாணிப்பதற்கான பணியில் ஈடுபட வேண்டுமென பொதுமக்களும், விவசாயிகளும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
.jpg)
8 minute ago
18 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
23 minute ago