Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 பெப்ரவரி 26 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட திராய்க்கேணி எனும் தமிழ் கிராமத்தின் மத்திய வீதி கடந்த 20 வருடங்களாக மிகவும் சேதமுற்ற நிலையில் காணப்படுகின்றது.
1990களில் ஏற்பட்ட இனமுறுகலையடுத்து தமது இருப்பிடங்களை விட்டும் வெளியேறிய திராய்க்கேணி மக்கள், 1995 ஆம் ஆண்டு மீளக்குடியேறினார்கள்.
ஆனாலும், இக்கிராமத்தின் உட்கட்டுமான வசதிகளில் அதிகமானவை இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை என்று இக்கிராம மக்கள் கூறுகின்றார்கள். அதில் முக்கியமானது மேற்படி வீதியாகும்.
சுமார் ஒன்றரைக் கிலோ மீற்றர் நீளமான இந்த வீதி தான் - இக்கிராமத்தின் பிரதான நுழைவாயிலாகும். ஆனாலும், கடந்த 20 வருடங்களாக இந்த வீதி மிகவும் சேதமடைந்த நிலையில் தான் காணப்படுகிறது.
தேர்தல் காலங்களில் இப்பிரதேச மக்களின் வாக்குகளை பெறுவதற்காக வரும் அரசியல்வாதிகள் இந்த வீதியினை திருத்தி அமைத்து தருவோம் என்று, காலகாலமாய் வாக்குறுதிகளை வழங்கி வருகின்ற போதிலும், இந்தப் பாதையின் அவல நிலை இன்னும் தீரவில்லை என்கிறார் திராய்க்கேணி கிராம அபிவிருத்தி சபையின் தலைவர்.
திராய்க்கேணி கிராமத்தின் மத்திய வீதியை திருத்தியமைத்து, அந்த மக்களின் சிறந்த போக்குவரத்துக்கு - மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் வழியேற்படுத்தித் தரவேண்டுமென அப்பிகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .