2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

பாண்டிருப்பு பொதுநூலக திறப்பு விழா

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

பாண்டிருப்பு கிராமத்தின் நீண்டகால தேவையாக கருதப்பட்ட பொதுநூலகத்தின் திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை பாண்டிருப்பு பெரியகுளத்து வீதியில் நடைபெற்றது.

கல்முனை மாநகரசபை, கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுசரணையுடன்  பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையமும் பாண்டிருப்பு சமூக அபிவிருத்தி அமைப்பும் இணைந்து இந்த நூலகத்தை நடத்தவுள்ளன.

மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் தலைவர் பா.செ.புவிராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில,; பிரதம அதிதியாக கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் க.லவநாதன் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.கிருஷ்ணகுமார், ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் கவிஞர் சண்முகம் சிவலிங்கம், வைத்திய அதிகாரி டாக்டர் புஸ்பலதா லோகநாதன்,  கல்முனை சம்பத் வங்கி முகாமையாளர் நிதர்ஷன் டேவிட், கல்முனை மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர்  ஹென்றி மகேந்திரன் ஆகியோர்களுடன் மதப் பெரியார்கள்,  மாநகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்றோர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--