2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

அட்டாளைச்சேனையில் கட்சிகளுக்கிடையில் மோதல்

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

தமது கட்சி அலுவலகத்தில் இருந்தபோது தாக்கப்பட்டதாகக் கூறப்படும், அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்ப்பாகப் போட்டியிடும் வேட்பாளரும், அவரின் ஆதரவாளர் ஒருவரும் பாலமுனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 11.45 மணியளவில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரான எஸ்.எல்.முனாஸ் என்பவர் அவரின் வேட்பாளர் அலுவலகத்தில் இருந்தபோது அவரும், அவருடைய ஆதரவாளர் ஒருவரும் – அதே பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பாளராகப் போட்டியிடும் ரி.ஆப்தீன் என்பவரால் தாக்கப்பட்டதாகவும், அலுவலகத்தில் இருந்த பொருட்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் - தாம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகக் தாக்குதலுக்குள்ளானவர்கள் கூறுகின்றனர்.

அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவைச் சேர்ந்த ஏ.எல்.யாசிர் என்பவரே தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் ஆதரவாளராவார்.

இதேவேளை, தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் அட்டாளைச்சேனை பிரதேசசபைக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான ரி.ஆப்தீன் என்பவர் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினை மறுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--