2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

அட்டாளைச்சேனையில் வடிச்சல் அபிவிருத்தி திட்ட விழா

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 28 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அட்டாளைச்சேனை, சம்புக்களப்பு வடிச்சல் அபிவிருத்தித் திட்ட ஆரம்ப விழா பாவங்காய் வீதியில் இன்று நடைபெற்றது.

கிழக்கு மாகாண நீர்ப்பாசன, வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை தலைமையில் நடைபெற்ற விழாவில் பிரதம அதிதிகளாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன், விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண அமைச்சர்களான ரீ.நவரெட்னராஜா, எம்.எஸ்.எம்.சுபையிர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான துல்கர் நயீம், எம்.எல்.ஏ.அமீர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், நீர்ப்பாசன திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

23 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் 8,500 ஏக்கர் வயற்காணிகளுக்கு சீரான நீர்ப்பாசனம் கிடைக்கவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .