2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளருக்கு எதிராக சுவரொட்டிகள்

Super User   / 2011 ஜூன் 13 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளருக்கு எதிராகன சுவரொட்டிகளை சம்மாந்துறை பாடசாலை  சுவர்களிலும், சம்மாந்துறை பிரதேசத்திலும் இன்று காணக்கூடியதாக இருந்தது.

'சர்வதிகார போக்குடைய மன்சூரே சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையிலிருந்து வெளியேறு' எனும் வாசகத்தினைக் கொண்ட சுவரொட்டிகள் சம்மாந்துறை மத்திய கல்லூரி மற்றும் அல் மர்ஜான் முஸ்லிம் பெண்கள் கல்லூரி உள்ளிட்ட பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன.

இதேவேளை, கடந்த சில நாட்களாக சம்மாந்துறைப் பிரதேசத்தில் சம்மாந்துறை கல்வி பணிப்பாளருக்கு எதிராகவும், அவரை சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திலிருந்து இடமாற்றம் பெற்றுசெல்லுமாறு கோரியும் பல்வேறு அமைப்புக்களின் பெயரால் துண்டுப்பிரசுரங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இதேவேளை, இன்று சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையினைச் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கிழக்கு மாகாணக் கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக்க நேரில் சென்று சந்தித்தபோது, சம்மாந்துறைக் கல்விப் பணிப்பாளரை இடமாற்மாற்றம் செய்யுமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • Dean Tuesday, 14 June 2011 12:03 AM

  வலயக் கல்விப் பணிப்பாளர் என்றால் என்ன எனத் தெரியாத மாணவர்கள் அவரை இடமாற்றம் செய்யச் சொல்வது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. மன்சூர் கவலைப் பட வேண்டாம் . இது உங்களுக்கு நல்ல பெயரைத்தான் தரும்.

  Reply : 0       0

  Anwer Noushard MJM Tuesday, 14 June 2011 04:39 AM

  மன்சூர் சேரின் நல்ல நடவடிக்கைகளை விளங்கிக் கொள்ளும் அளவுக்கு புத்தி இருந்தால் நோட்டீஸ் அடிக்கும் அளவுக்கு போய் இருக்க மாட்டார்கள். இவர்கள் போன்ற சமுக தூர சிந்தனை அற்றவர்களை எமது மக்கள் விளங்கிக் கொள்வார்கள். மன்சூர் சேர் இதற்கெல்லாம் அலட்டிக்கொள்ள மாட்டார்.

  Reply : 0       0

  student of mansoor tr Tuesday, 14 June 2011 10:19 PM

  இப்படியானதொரு சம்பவத்தை கேட்கும்போது மனம் கவலையடைகிறது.

  Reply : 0       0

  Teachers of Amparai Tuesday, 21 June 2011 04:45 AM

  சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் மன்சூரே, உங்களை திருகோணமலை வலயத்திற்கு அன்புடன் அழைக்கிறோம்.

  புல்மோட்டையில் கடமையாட்டும் அம்பாறை மாவட்ட ஆசிரியர் சங்கம்

  Reply : 0       0

  Rinas from Doha Wednesday, 15 June 2011 04:08 AM

  மன்சூர் சேர் இதெல்லாம் அலட்டிக்கொள்ள மாட்டார். சும்மா உசாருக்கு போஸ்டர் அடிக்கிற ஆக்கள் தேவைப்படும் எண்டு அரசியல்வாதி யாராவது நெனச்சு தலையிட்ட, பாவம் சம்மாந்துறை கல்வி வலயம். சேர் உங்களுக்கு அடுத்த வலயம் ரெடி, அதே மிடுக்கோட நீங்க ரெடி ஆகுங்க.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .