Super User / 2011 ஜூன் 16 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எம்.எம்.ரம்ஸான்)
ஆசிரியர் இடமாற்றம் பெற்றுள்ள கல்முனை கல்வி வலய ஆசிரியர்கள் இன்று வியாழக்கிழமை நண்பகல் கல்முனை வலய கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸுடனான சந்திப்பையடுத்து இந்த ஆசிரியர்கள் வலய கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சில மணி நேரத்திற்;கு பின்னர் அங்கு வருகை தந்த கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபிக் இடமாற்றம் பெற்றுள்ள ஆசிரியர்களை சந்தித்தார்.
கல்வி பணிப்பாளருடன் வலய கல்வி அலுவலக உயர் அதிகாரிகள், கல்முனை பெலிஸ் நிலைய பிரதிநிதிகள் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இந்த இடமாற்றத்தின் மூலம் தமக்கு அநீதி இழைக்கப்பட்டும் விடயங்களை தெளிவாக ஆசிரியர்களால் புள்ளிவிபரங்களுடன் முன்வைக்கப்பட்டது.
இவற்றை கேட்ட வலய கல்வி பணிப்பாளர் அனைத்து அநீதிகளையும் எழுத்து மூலம் பெற்றதுடன் இவற்றை மேலதிகாரிகளுக்கு தெரிவிப்பதுடன் என்னுடனுடன் பேசிய அரசியல்வாதிகளுக்கு இதை மின்னஞ்சல் மூலம் உடனடியாக அனுப்புவதாக வாக்களித்தார்.
.jpg)
19 Nov 2025
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025