2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

கல்முனையில் யுவதியை கடத்தும் முயற்சி முறியடிப்பு

Menaka Mookandi   / 2011 ஜூன் 21 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை பிரதேசத்தில் வைத்து இன்று காலை இனந்தெரியாத ஆயுததாரிகள் சிலரால் யுவதியொருவரை வேனில் கடத்திச் செல்ல எடுக்கப்பட்ட முயற்சி பிரதேசவாசிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

தனது கடமைக்காக காரியாலயத்தை நோக்கி வழமை போல் முச்சக்கர வண்டியில் குறித்த யுவதி பயணித்துக்கொண்டிருந்த போது கல்முனை கோவில் வீதிக்கருகில் வைத்து வேனொன்றில் வந்த இனந்தெரியாதோர் சிலர் அவ்யுவதியை வழிமறித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த முச்சக்கரவண்டி சாரதியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ள அவர்கள், மேற்படி யுவதியை கடத்த முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் முச்சக்கரவண்டியின் சாரதி பலமாகக் கத்தி பிரதேசவாசிகளின் உதவியைப் பெபெற்றுயில் யுவதியைக் காப்பற்றியுள்ளார்.

பின்னர் அவ்விடத்திற்கு வந்த கல்முனை பொலிஸார், சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0

 • kalam Thursday, 23 June 2011 12:55 AM

  குற்றவாளி தப்பமுடியாத படப்பிடிப்பு. வாழ்க தமிழ் மிரர்.

  Reply : 0       0

  IBNU ABOO Wednesday, 22 June 2011 02:43 AM

  சில முச்சக்கர வண்டி சாரதிகளே இப்படியான கடத்தல்களுக்கு உதவுகின்ற இக்காலத்தில் இச்சாரதியின் சாதுர்யமும், கடமையுணர்வும் ,தியகமனப்பான்மையும் மற்ற சாரதிகளுக்கு ஒரு முன்மாதிரியாகட்டும். இதேவேளை கடத்தல்காரர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

  Reply : 0       0

  Mohd rizvi -Qatar Wednesday, 22 June 2011 04:02 PM

  கடத்தல் காரர்களை கைது செய்ய பொலிசார் துரித முயற்சி எடுக்க வேண்டும் அத்தோடு தக்க தண்டனையும் வழங்க வேண்டும். அப்பதான் இனி மேல் இப்படி நடக்காது

  Reply : 0       0

  ralan Wednesday, 22 June 2011 08:01 PM

  படப்பிடிப்பு அபூர்வம் வாழ்த்துக்கள் .

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .