2021 மே 12, புதன்கிழமை

ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன, கிழக்கு மாகாண அமைச்சர் ரீ.நவரட்ணராஜா, பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், அம்பாறை மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல்.தௌபிக், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் பொதுசன தொடர் அதிகாரி எம்.எஸ்.ஜௌபர் உட்பட அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இங்கு கமநெகும, திவிநெகும மூலம் ஒதுக்கப்பட்ட நிதிகள் பிரதேச அபிவிருத்திக்கு பகிர்ந்தளிக்க அனுமதி வழங்கப்பட்டது. (பியசேன எம்.பி. - ஊடகப்பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .