2021 மே 06, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் அம்பாறை மாவட்ட காரியாலயம் திறப்பு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்சுபையிரின் அம்பாறை மாவட்ட காரியாலயம் நேற்று சனிக்கிழமை கல்முனையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கல்முனை மாநகர சபை தேர்தலிலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபின் வேட்பாளருமான ஏ.சி.எஹியா கான் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் சிரேஷ்ட அமைச்சர்களான பீ.தயாரட்னஇ ஏ.எச்.எம்.பௌசிஇ  நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர்இ அகில இலங்கை மக்கள் காங்கிரஸியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.


  Comments - 0

 • š¾®Í Thursday, 22 September 2011 04:25 AM

  அரசியல் சொல்லிக்கொடுத்த கட்சிக்கே இவரு ஆப்பு வைத்தவர். கல்முனை மக்களே ஹமீட் காக்கா, யகியாகான் எல்லாரும் என்ன என்னத்தைய்யொ காணவில்லை என்று ஓட போகினம். இது நிச்சயம் ஆனால் முஸ்லீம் காங்கிரஸ் இம்முறை அமோக வெற்றியீட்டும் என்பது உறுதி.

  Reply : 0       0

  pasha Monday, 19 September 2011 03:51 AM

  கிழக்கு மாகாணம் அமைத்து எத்தனை வருடம்? இப்போ தான் இவர்களுக்கு ஒரு முக்கியமான கல்முனை நாகரில் காரியாலயம் அமைக்க தோன்றியுள்ளது

  Reply : 0       0

  Rizadh SMT Monday, 19 September 2011 06:54 PM

  மாபெரும் தலைவர் மர்ஹூம் எம். எச். எம். அஸ்ரப்புக்குக் பிறகு.... ஆளுக்கொரு கட்சியும்... எல்லோரும் தலைவர்.... என்றாகிவிட்டது..

  Reply : 0       0

  Dean Sunday, 18 September 2011 02:12 PM

  அரச வசதிகளை பயன்படுத்தி வோட்டுக் கேட்டாலும் கல்முனை முஸ்லிம் காங்கிரசுக்குத்தான் , இது ஜனாதிபதிக்கும் தெரியும் , அது சரி , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு அலுவலகம் என்றால் , மாகாண சபையில் இருந்து ஒருவரையும் காணவில்லையே!

  Reply : 0       0

  rakkish. Sunday, 18 September 2011 08:23 PM

  நீங்க யாருக்கும் வாக்களிக்கலாம்.. உங்கள் உரிமை... ஏதோ நல்லது செய்தால் விடுங்கய்யா.. செய்றதும் இல்ல செய்றவங்கள விடுறதும் இல்ல.. என்ன கொடுமையா.. எப்படியோ அவருக்கு வாக்களித்த மக்களுக்கு அவர் நிறைய செய்திருக்கிறார்... மு.கா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .