2021 மே 08, சனிக்கிழமை

அநுராதபுரத்தில் சியாரம் உடைப்பு; அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்

Super User   / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

பயங்கரவாதம் நிலவிய காலங்களிலும் சரி, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தற்போதைய காலத்திலும் சரி, முஸ்லிம்களின் மதம் மற்றும் சமயம் தொடர்பிலான செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தல்கள் இருந்து கொண்டே வருகின்றன.

பயங்கரவாதம் நிலவிய காலங்களில் பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பரங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தற்போதைய காலத்தில் பேரினவாதிகளால் முஸ்லிம்களின் மதஸ்தலங்கள் உடைக்கப்படுகின்றன.

துரதிஷ்டவசமாக, முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் மேற்கொண்ட செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்ததாக கூறிய அரசியல்வாதிகள், இப்போது முஸ்லிம்களின் மதஸ்தலங்களைத் பேரினவாதிகள் தரை மட்டமாக்கும் போது, தங்கள் புலன்களையெல்லாம் இறுகப்பொத்திக் கொண்டிருப்பது ஆச்சரியங்களையும், சந்தேகத்தினையும் ஏற்படுத்துகின்றது என அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினரும்  மார்க்க அறிஞருமான அஷ்ஷேய்க் எஸ்.எல்.எம். ஹனீபா (மதனி) தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஸியாரம் உடைக்கப்பட்டமை மற்றும் முன்னேஸ்வரம் கோவிலில் பலிகொடுக்கப்படவிருந்த விலங்குகள் பலாத்காரமாகப் பறித்துச் செல்லப்பட்டமை ஆகிய விவகாரங்கள் குறித்தும், இவை தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை அமைச்சர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கருத்துத் தெரிவித்த போதே ஹனீபா (மதனி) மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அண்மைக் காலமாக இந்த நாட்டில் சிறுபான்மையாக வாழும் மக்களின் சமய வழிபாட்டுத் தலங்கள் மீது மனிதாபிமானம், மத நல்லிணக்கமற்ற முறையில் வன்முறைகளும், அத்துமீறல்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், துரதிஷ்டவசமாக அரசாங்கம் இதைக் கண்டும் காணாமல் இருக்கின்றது.

நாட்டில் இன சௌஜன்யம் மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாப்பதற்கு இவ்வாறான சம்பவங்கள் பாரிய அச்சுறுத்தல்களாகும்.

அநுராதபுரம் ஓட்டுப்பள்ளத்தில் அமைந்துள்ள சேகு சிக்கந்தர் ஒலியுல்லாஹ் அப்பாவின் ஸியாரம் தர்க்காவை – பள்ளிவாசல் என எண்ணிக்கொண்டு பௌத்த துறவிகளும், பொலிஸ் அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்த நிலையில் உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிலாபத்தில் அமைந்துள்ள முன்னேஸ்வரம் கோவிலில் பலியிடுவதற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆடுகளை, அரசின் அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் வந்த குழுவினர் பலாத்காரமாக கோவில் வளாகத்திலிருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.

மேற்படி நடவடிக்கைகள், சிறுபான்மை மக்களின் சமய அடிப்படை உரிமைகளை மறுதலிக்கும் விடயங்களாகும். இவ்வாறான நிகழ்வுகளால் சிறுபான்மையினரின் மனதிலுள்ள 'சுதந்திரம்' எனும் நம்பிக்கையானது கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்களை பொறுத்தவரை மரணித்தவர்களுக்கு தர்க்காக்கள் அமைப்பதும், அவ்விடங்களில் வழிபாடுகளில் ஈடுபடுவதும் சர்ச்சைக்குரிய விடயங்களாகும். இதேபோன்று, இந்துக் கோவில்களில் உயிர்ப் பலியிடுவது குறித்தும் மாறுபட்ட வாதப் பிரதிவாதங்கள் உள்ளன.

எவ்வாறுள்ள போதும், இவை - சம்பந்தப்பட்ட சமயங்களை பின்பற்றுவோர் மட்டுமே தலையிட்டு முடிவெடுக்க வேண்டிய விவகாரங்களாகும்.

பௌத்த சமயத்தை பின்பற்றுகின்ற துறவிகளும் - சட்டம், ஒழுங்கு, அமைதியை  பாதுகாக்காக்க வேண்டிய பொலிஸ் அதிகாரிகளும், இவை யாவற்றுக்கும் மேலாக - இந்த நாட்டின் ஜனாதிபதியுடன் நேரடி தொடர்புடைய அமைச்சர் மேர்வின் சில்வாவும் - மனித நாகரீகத்துக்கும், மத நல்லிணக்கத்துக்கும் எதிராக நடந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கைகளினூடாக இனத்துவேசத்தையும், சமய முரண்பாடுகளையும் இவர்கள் தூக்கிப் பிடிக்கத் துவங்கிள்ளமையானது மிகவும் இழிவும், அருவருப்புகளும் நிறைந்த செயற்பாடுகளாகும்.

இவைபோன்ற விடயங்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியவைகளாகும். இவ்விவகாரங்களை ஜனாதிபதியிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு – அரசில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை சமூகங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களின் அதி முக்கிய கடமைகளாகும். இந்த அமைச்சர்கள் இவ்விடயங்களில் மௌனிப்பது காத்திரமான நிலைப்பாடாக அமையாது.

பயங்கரவாதம் நிலவிய காலங்களிலும் சரி, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தற்போதைய காலத்திலும் சரி, முஸ்லிம்களின் மதம் மற்றும் சமயம் தொடர்பிலான செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தல்கள் இருந்து கொண்டே வருகின்றன.

பயங்கரவாதம் நிலவிய காலங்களில் பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பரங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தற்போதைய காலத்தில் பேரினவாதிகளால் முஸ்லிம்களின் மதஸ்தலங்கள் உடைக்கப்படுகின்றன.

துரதிஷ்டவசமாக, முஸ்லிம்களுக்கெதிராக பயங்கரவாதிகள் மேற்கொண்ட செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்ததாகக் கூறிய அரசியல்வாதிகள், இப்போது முஸ்லிம்களின் மதஸ்தலங்களைத் பேரினவாதிகள் தரைமட்டமாக்கும் போது, தங்கள் புலன்களையெல்லாம் இறுகப் பொத்திக் கொண்டிருப்பது ஆச்சரியங்களையும், சந்தேகத்தினையும் ஏற்படுத்துகின்றது.

இதேவேளை, தர்க்காகளிலும் ஸியார வழிபாடுகளிலும் அதீத நம்பிக்கையும், ஈடுபாடுகளும் கொண்டுள்ள, அரசியல்வாதிகள் கூட, அநுராதபுரம் ஸியாரம் உடைப்பு விவகாரத்தைக் கண்டிக்காது மௌனம் சாதிப்பதும், மேற்படி வன்முறைகளில் ஈடுபட்டவர்களை இனங்கண்ட பின்பு, வேறு தரப்பார் மீது வீண்பழி சுமத்துவதும் மனதுக்கு வேதனையளிப்பதோடு, வேடிக்கையாகவும் உள்ளது என்றார்.


  Comments - 0

 • AKP Yan Tuesday, 20 September 2011 08:20 PM

  ஏன் இவர் இதை இங்கு சொல்லுறார். இவர தலைவர் ஆளும் கட்சீல இருக்காரே அவரோட சொல்லலாமே.

  Reply : 0       0

  risimb Monday, 19 September 2011 01:27 AM

  என்னசொல்ல வரீங்க உங்களது பேச்சில் எதோ ஒன்று உள்ளது! [இறைவன் அல்லாத, இறைவனால் படைக்கப்பட்ட]அற்பமான பொருட்களை வணங்குவது [ஷிர்க்,இணைவைத்தல்] ஆகும். சியாரம் உடைக்கப்பட்டதற்கு இறைவனிடம் பிராத்தனை செய்யாது,சம்மந்தமில்லாத பேச்சு பேசுறீங்களே! உங்கட நோக்கம் என்ன? தயவுசெய்து வெளிப்படுத்துங்க.

  Reply : 0       0

  š¾®Í Thursday, 22 September 2011 04:14 AM

  akp க்கு ஒரு கதை தெரியுமோ, உமது ஊர்த்தலைவர் என்ன செய்றார் என்று போய் பார்த்து அவரிடம் சொல்லுப்ப்பா சும்மா உளம்பாம,

  Reply : 0       0

  amjadh Thursday, 22 September 2011 11:45 PM

  இந்த பிரச்சினை உடனடியாக தீர்க்க படவேண்டும், இல்லையேல் தலை மேல் ஏறி நசுக்கி விடுவார்கள்.

  Reply : 0       0

  சிராஜ் Tuesday, 20 September 2011 07:44 AM

  ரிசிம்ப் என்ன கிறுக்கா பிடித்திருக்கு? செய்தி கொடுத்திருப்பவர் ஒரு சிறந்த மெளலவி. மதினாவில் பட்டம் பெற்றவர். அது மட்டுமன்றி சிறந்த அரசியல்வாதி. இவருக்கு இருக்கும் தைரியம் இன்று அதாவுல்லாக்கே இல்லை. இங்கு சியாரம் என்பது அல்ல பிரச்சனை. உடைக்கப்பட்ட பள்ளி ஏன் காவிஉடை தரித்த காவாலிகள் உடைத்தார்கள்? நாளைக்கு உங்கள் பக்கத்திலுள்ள பள்ளியையும் உடைப்பார்கள் இப்படியே விட்டால்.....? உடனே இப்படி உறுதியாக ஒற்றுமையாக குரல் கொடுப்போம்.

  Reply : 0       0

  sadath Sunday, 18 September 2011 09:15 PM

  உங்கள் கருத்துக்கு நன்றி, சந்தோசம்! ஆனால் மினிஸ்டர் அத்தவுல்லாஹ் எங்கு சென்றார்? சியரத்தை கட்ட வலி பண்ணுங்க....

  Reply : 0       0

  ibnuaboo Wednesday, 21 September 2011 10:47 PM

  ரிசிம் சின்னபிள்ளதனமா பிதற்றாதீங்க. அச்செய்க் ஹனிபா அவர்களின் அறிக்கையை நுனிப்புல் மேய்ந்து படித்திருப்பீர்கள். அதையும் விளங்கியிருக்க மாட்டீர்கள். மீண்டும் ஒருமுறை எழுத்துகூட்டி படியுங்கள். அவர் ஆழமான நிதானமான மார்க்க அறிஞர் என்பதை அவரது அறிக்கை காட்டியுள்ளது. யாருக்கு மார்க்கம் கற்பிக்கிறீர்கள். தகப்பன் சாமி வேலை வேண்டாம் தம்பி .

  Reply : 0       0

  rozan Sunday, 18 September 2011 11:28 PM

  இன்னமும் இருக்கு.....வெயிட் பண்ணுங்க.....

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X