2021 மே 12, புதன்கிழமை

கல்முனை மாநகர சபை தேர்தல் நடவடிக்கைகளுக்காக முஸ்லிம் காங்கிரஸினால் விஷேட குழு நியமனம்

Super User   / 2011 செப்டெம்பர் 20 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை மாநகர சபை தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விசேட கூட்டம் நேற்று திங்கட்கிழமை கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நித்தவூரில் இடம்பெற்றது. இதன்போதே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

திகாமடுல்ல மாவட்ட  நாடாளுன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் தலைமையிலான இக்குழுவில் சாய்ந்தமருதிலிருந்து முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் தொழில் அதிபருமான அன்வர் ஹாஜி, ஆசிரியர் எம்.எம்.எம்.றபீக், கல்முனையிலிருந்து நீதி அமைச்சரின் இணைப்பு  செயலாளர் றஹ்மத் மன்சூர், எம்.எஸ்.எம்.சத்தார், மருதனைமுனையிலிருந்து தொழிலதிபர் எம்.தாஜுத்தீன் நற்பிட்டிமுனையிலிருந்து கட்சி அமைப்பாளர் எம்.அமீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0

  • Riyal A.M Wednesday, 21 September 2011 05:05 PM

    எப்பதான் முடியும் இந்த நாடகம் ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .