Kogilavani / 2011 செப்டெம்பர் 25 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையினால் இரத்ததான நிகழ்வொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை அல் - முனீறா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துத் தர்பியதில் இஸ்லாமியா (இஸ்ஸாமிய கல்வி வழிகாட்டி அமைப்பு) இதனை ஏற்பாடு செய்திருந்தது.
இரத்த தானம் செய்வதற்கு மக்கள் மத்தியிலுள்ள அச்சத்தினைப் போக்குவதும், பெறுமதியான மனித உயிர்களை இரத்த தானம் வழங்குவதன் மூலம் காப்பாற்றுவது குறித்த விழிப்புணர்வுமே இந்நிகழ்வின் பிரதான நோக்கம் என நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த அமைப்பின் தலைவர் ஓ.எல்.எம். முனவ்வர் தெரிவித்தார்.
மேற்படி இரத்த தான நிகழ்வில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியினைச் சேர்ந்த வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
17 minute ago
45 minute ago
53 minute ago
1 hours ago
Dr Abdul Razak Monday, 26 September 2011 12:34 PM
அட்டளைச்சேனை தௌஹீத் ஜமாஅத் சகோதரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு அக்கரைப்பற்று ஆதர வைத்தியசாலையின் அனுசரையின் கீழ் நடைபெற்ற இந்த இரத்த தான நிகழ்வில் ௬௨ சகோதரர்கள் தமது இரத்தத்தை வழங்கி நிகழ்வை சிறப்பித்தார்கள். அவர்களுக்கு எமது நன்றிகள்.
இதே மாதிரியான நிகழ்வுகள் மேலும் தொடர்ந்தும் எம் சமூகத்தில் நடைபெற வேண்டும்.
அல்ஹம்துலில்லாஹ்
.
Reply : 0 0
Nowfer Tuesday, 04 October 2011 08:27 PM
இது சுயநலவாதிகளால நிச்சயமா செய்யமுடியாது. இத்தம் கொடுப்பதுக்கு ஒரு தைரியமும் துணிவும் வேணுங்க. தௌஹீத் சகோதரர்கள் இதை செஞ்சிகாட்டியிருக்காங்க. இது அருமையான ஒரு சமூக சேவை. பாராட்டுக்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
45 minute ago
53 minute ago
1 hours ago