2021 மே 10, திங்கட்கிழமை

நியமணக் கடிதம் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 30 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சமுர்த்தி ஊக்குவிப்பாளர் சேவைக்காலத்தை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையுடன் இணைக்கும் வேலைத்திட்டத்திற்கான நியமணக் கடிதம் வழங்கும் வைபவம் இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சமுர்த்தி தலைமைக் காரியாலய முகாமையாளர் எம்.பி.எம்.ஹுசைன் தலைமையில் நடைபெற்ற   இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் யூ.எல்.எம்.சலீம் உட்பட முகாமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் கீழ் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை திணைக்கள சேவைக்குள் உள்வாங்கும் நடவடிக்கையின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X