2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

கிராமங்களினுள் காட்டு யானைகள் உட்புகுந்ததால் மக்கள் பெரும் அவதி

Kogilavani   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் உட்புகுந்து பயிர்செய்கைகளுக்கும், குடியிருப்புக்களுக்கும் பலத்த சேதத்தையும் விளைவித்த வருவதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

புதிய வளத்தாப்பிட்டி, பழைய வளத்தாப்பிட்டி, இஸ்மாயில்புரம், மல்வத்தை, சொறிக்கல்முனை, குடிவில், வாங்காமம், மத்தியமுகாம்  மற்றும் சவளக்கடை போன்ற எல்லைப்புறக் கிராமங்களில் சிறுபோக வேளாண்மை அறுவடை முடிவடைந்துள்ள நிலையில்  இரவு வேளைகளில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டு யானைகள் வயல் நிலங்களில் அண்மித்த குடியிருப்பு பகுதிக்குள் நுளைந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதுடன், குடிசைகளுக்கும் பலத்த சேதத்தை விளைவித்து வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இரவு நேரங்களை அச்சத்துடன் கழிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--