2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

அரசியல் தீர்வானது முஸ்லிம் மக்களாலும் ஏற்றுகொள்ளக்கூடியதாக அமைவதை உறுதி செய்வதே எமது முயற்சி: இரா. ச

Kogilavani   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)
இனப்பிரச்சினைக்கு காணப்படவுள்ள அரசியல் தீர்வானது தமிழ் மக்களால் ஏற்றுகொள்ளக்கூடியதாக இருப்பதைப் போன்று முஸ்லிம் மக்களாலும் ஏற்றுகொள்ளக்கூடியதாக அமைவதை உறுதி செய்வதே எமது முயற்சியாக இருக்கும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளர்.

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும உள்ளூராட்சி தேர்தல் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'தமிழ்  தேசியக் கூட்டமைப்பு -  இலங்கைத் தமிழரசுக் கட்சி  கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றது. இப்பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் பலம் எமக்கு இல்லாமல் இருப்பினும் இப்பிரதேச மக்களின் நலன்களுக்காக பயன்தரமிக்க பங்களிப்பை வழங்கமுடியும் என்பதை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் எமக்கு இருக்கின்றது என்பதைத் தேர்தல் மூலம் தெரியப்படுத்தலாம்.

மேலும் தமிழ் வாக்காளர்கள் ஒன்றுபட்டு நின்று நாங்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு- இலங்கை தமிழரசுக்கட்சியின் கொள்கைகளை ஒருமனதாக ஆதரிக்கின்றோம் என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்ட வேண்டும்.

யுத்தம் மற்றும் பேரழிவிற்குப் பின்னர் தேசியப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என்ற தேவை பொருத்தமான இடங்களில் வழமைக்கு மாறான முக்கியத்துவத்துடன் உருவாகியுள்ளது.

நாட்டின் எதிர்கால நலன் குறித்த ஏனைய முக்கிய  பிரச்சினைகளானவை, தேசியப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு காணுவதுடன் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன.

ஜனநாயகம், அடிப்படை மனித உரிமைகள், அனைவரையும் உள்ளடக்கும் தன்மை, சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளும் அடிப்படையில் தான் இவற்றை அடையலாம். தமிழ் மக்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தும்போது மேற்கூறப்பட்ட கொள்கைகளின்
அடிப்படையில் தங்கள் வாக்குகளை அளிக்கும்போதுதான் தேசியப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதான தீர்வைக் காணக்கூடியதாக இருக்க முடியும், அத்துடன் அவர்களுக்கு சமமான பிரஜைகள் என்ற அந்தஸ்தை வழங்குவதாகவும் அது அமையும்.

தேசியப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றை உருவாக்குமுகமாக அரசாங்கம் தமிழ்த் தேசியக்;கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றது,

தமிழ் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலிலும் உள்ளூராட்சித் தேர்தலிலும் வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பலமான ஆதரவை நல்கியதுடன் தங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றை பேச்சுவார்த்தை மூலம் காணும்படி தெளிவான ஜனநாயக ஆணையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியுமுள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இப்பணியை செய்து முடிக்க திடசங்கற்பம் பூண்டுள்ளது. இப்பணியைச் செய்து முடிப்பதற்கான பலத்தை தமிழ் வாக்காளர்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு மீண்டும் உறுதிப்படுத்தி வெளிக்காட்டுவது கட்டாயமானதாகும்.

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதானதும் நியாயமானதும் நேர்மையானதுமான தீர்வு ஒன்றைக் காணுவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம். முஸ்லிம் சகோதரர்களின் அக்கறைகள் குறித்து நாம் குறிப்பாக கரிசனை கொண்டுள்ளோம்.  காணப்படவுள்ள அரசியல் தீர்வானது தமிழ் மக்களால் ஏற்றுகொள்ளக்கூடியதாக இருப்பதைப் போன்று முஸ்லிம் மக்களாலும்
ஏற்றுகொள்ளக்கூடியதாக அமைவதை உறுதி செய்வதே எமது முயற்சியாக இருக்கும்.

சிங்கள சகோதரர்களின் நியாயமான உரிமைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக அமையாது வடக்கு கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற தமிழ்ப் பேசும் மக்களின் பொதுவான அக்கறைகளான எமது தனித்துவம், எமது பாதுகாப்பு, பிரதேச வளங்கள்  மற்றும் எமது பொருளாதார, சமூக, கலாசார நலன்களைப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற இலக்குகளை அடைவதற்கு நாம்-தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.

இந்த உண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படும் நாள் விரைவில் வந்தேயாகும். எதிர்வரும் கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வலுவான ஆதரவை வழங்க வேண்டும் என்று மக்களை நாம் வேண்டுகின்றோம்.


  Comments - 0

 • nawshadmn Thursday, 06 October 2011 02:18 AM

  muthalil yalpanathil idem peyernthe muslimkalin meelkudiyetrethai sinthiyungel.

  Reply : 0       0

  nawshadmn Thursday, 06 October 2011 02:20 AM

  neengel arasanthile irunthu enne urimaikalai peruhireerkelo, athe urimaiye muslimkalum peruvethetku valisamaikkavum.

  Reply : 0       0

  Mohammed Hiraz Wednesday, 05 October 2011 11:37 PM

  உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமையே முஸ்லிம்களுக்கும் இருக்கிறது!!! நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளர் எனில் முதலில் முஸ்லிம்களின் பாரம்பரிய வாழ்விடங்களை தமிழர்கள் பாரம்பரியமாக வாழும் இடங்களுடன் நிர்வாக ரீதியில் இணைத்து முஸ்லிம்களை சிறுபான்மை இனமாக மாற்றும் என்னத்தை கைவிடுங்கள். மேலும் இடம் பெயர்ந்த யாழ் முஸ்லிம்களின் மீள் குடி ஏற்றத்திற்கு நிதியத்தை ஆரம்பித்து பங்களிப்பு செய்யுங்கள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--