2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் துஷ்யந்தன் காலமானார்

Super User   / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு, உறுப்பினர் வடிவேல்துஷ்யந்தன் இன்று  சனிக்கிழமை பகல் வைத்திய சாலையில் மரணமாகியுள்ளார் என ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் க.இரத்தினவேல் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று 7ம் பிரிவு குருக்கள் வீதியை சேர்ந்த ஆலையடிவேம்பு பிரதேச சபையின் உறுப்பினரான  வடிவேல் துஷ்யந்தன் (28) கடந்த சில நாட்களாக சுகயீனம் காரணமாக் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனளிக்காது இன்று சனிக்கிழமை பகல் மரணமாகியுள்ளார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் க. இரத்தினவேல்  தெரிவித்தார்.

சீ.யோகேஸ்வரன் எம்.பி. அனுதாபம்

ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் வடிவேல் துஷ்யந்தன் அகால மறைவு அரசியலில் இளைய தலைமுறையினரின் எழச்சிக்கு ஈடுசெய்ய முடியாது என மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அனுதாப செய்தியல் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'கடந்த உள்ளூராட்சி சபைககான தேர்தலில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இளைஞராக போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இளம் அரசியல் வாதியான மறைந்த வடிவேல் துஷ்யந்தன் ஆலையடிவேம்பு பிதேசத்தின் வன்முறையற்ற அரசியலில் ஊடாக தமிழ் மக்களின் அபிலாசைகளை பெறுவதற்காக முன்மாதிரியாக  அரசியிலில் குதித்து தன்மான தமிழ் மக்களுக்காக செயற்பட்டவர்.

சமய பக்தியும் நற்குணங்களையும் கொண்ட இவர் பல்வேறு அழத்தங்கள் மத்தியில் ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்காக குரல்கொடுத்து ஜனநாயக வழிமுகைளும் பாதைகளும் அடைபடவில்லை இப்பாதை வழியே சென்று எம் இனத்தை காப்பாற்ற முடியும் என இளைஞர் யுவதிகளுக்கு உணவைத்து தொண்டாற்றிய ஒரு இளம் அரசியல் தலைவனை ஆலையடிவேம்பு பிரதேச தமிழர்களும் தமிழ் மக்களும்  இழந்து நிற்கின்றது.

கடந்த சில நாட்களாக சுகயீனம் காரணாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்னாரது தீடிர் மரண செய்தியை கேட்டு நாங்களும் தமிழ் மக்களும் அதிர்ச்சியடைந்தோம் . அன்னாரின் மறைவு தமழ்மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
 இவரது மறைவுக்கு குடும்பத்தாருக்கு மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்கள் சார்பில் அஞ்சலி செலுத்துவதடன் அவரது ஆத்மசாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்'
 


  Comments - 0

  • Birdeye Sunday, 09 October 2011 04:41 PM

    எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--