2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மேயர் நியமனம் குறித்து கட்சியின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வேன்: சிராஷ்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)
'மேயர் நியமனம் தொடர்பாக கட்சி என்ன முடிவெடுக்கின்றதோ அதற்கு நான் ஒத்துழைப்பு வழங்குவேன்.  உயர்பீட அங்கத்தவர்களின் கூட்டத்தில் இதற்கான முடிவு வெளியிடப்பட இருக்கின்றது. ஆகக்கூடிய வாக்குகளை நான் பெற்றிருக்கின்றேன். கட்சி ஜனநாயகப்படி நடக்கும் என்பதே எனது கருத்தாகும். மேலும் மக்கள் அதிகூடிய வாக்குகளினால் என்னை  வெற்றியடைய செய்துள்ளனர், மக்களின் ஆணையை கட்சி மதிக்கும் என நான் நம்புகின்றேன்' என கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் வெற்றியீட்டிய  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் அதிகூடிய வாக்குகளைப்பெற்ற வேட்பாளர் எம்.எஸ். ஷிராஷ் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு நிகழ்விலே இவ்வாறு அவர் கூறினார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்,

எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதற்காகவே அன்றி வேறு எந்த நோக்கத்திற்காகவும் ஊடகவியலாளர்களாகிய உங்களை நான் அழைக்கவில்லை. அந்த ரீதியில் எனக்கு வாக்களித்த அனைத்து தரப்பினருக்கும் எனது உள்ளத்தினூடான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.  கொழும்பில் இடம்பெற இருக்கும் எமது கட்சியின் உயர் மட்டக்குழுக் கூட்ட தீர்மானத்தின் பின் மீண்டும் நான் மக்களை சந்தித்து பிரதேசவாதம் இன்றியும், இன மாத, அரசியல் வேறுபாடுயின்றியும் என்னால் முடிந்த அபிவிருத்திகளை மேற்கொள்வேன்.  

கல்முனை மாநகர சபைக்காக தெரிவு செய்யப்பட்ட சகல  அரசியல் பிரதிநிதிகளும் தங்களது கடந்த கால நடவடிக்கைகளை மறந்துவிட்டு இம் மாநகர சபையின் அபிவிருத்திக்காக என்னோடு ஒத்துழைக்குமாறு அன்புக்கரம் நீட்டி வரவேற்கின்றேன்.

நான் கல்முனை மாநகர சபைக்கான முதல்வராக நியமிக்கப்பட்டால் இன மத வேறுபாடுகளின்றி ஒரு பிரதேசத்திற்கு மாத்திரமல்லாது கல்முனை தொகுதியை கட்டியெழுப்பி அபிவிருத்தி அடைய செய்வேன் எனக் கூறினார்.


  Comments - 0

 • iqbal Tuesday, 11 October 2011 08:44 PM

  உங்களது கருத்தை வரவேற்கிறோம். நன்றி.

  Reply : 0       0

  கட்சியின் நேசன் Tuesday, 11 October 2011 09:00 PM

  பெருந் தலைவரின் அடிச்சுவடுகளை பின்பற்றும் தலைமைத்துவமாக இருந்தால் மக்களின் அபிலாசைக்கு மதிப்பளித்து முதல்வர் பதவியினை ஜனநாயக வரம்புக்குட்பட்டு சீராசிக்கு வழங்க வேண்டும். நீதம் தவறி முடிவெடுக்கப்படும் பட்சத்தில் அல்லாஹ் உங்கள் மீதும் நீதம் காட்ட மாட்டான். நாம் விரும்புவது நேர்மையான சிறந்த தலைமைத்துவமே. தலைவரே காரியப்பருக்குக் கொடுத்து தனது கண்களை தாங்களே குருடாக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம். தாங்கள் வெட்டிய குழியிலே தாங்களே விழப்போகிறீங்களா? சிந்தித்து நல்ல முடிவெடுங்கள்.

  Reply : 0       0

  AR.NILAAKP Thursday, 13 October 2011 01:39 AM

  நல்லா நினையுங்க நல்லேது நடக்கும்.

  Reply : 0       0

  hameed Tuesday, 11 October 2011 10:40 PM

  சிராஸ் உங்களுக்கு எதிர்காலம் இருக்குறது. இது உங்களுக்கு நல்ல தர பரிச்சை .... இதில் புத்தியுடன் நடவுங்கள் .... விட்டுகொடுப்புடன் நடந்தால் அடுத்த எம்பி அல்லது மேயர் நீங்கள்தான் .... உங்கள் நலன் விரும்பி ...

  Reply : 0       0

  ziyath Tuesday, 11 October 2011 10:50 PM

  சிராஜ் அரசியலில் இன்னும் அனுபவம் வேண்டும் ...

  Reply : 0       0

  kavi Thursday, 13 October 2011 04:18 AM

  ஹரீஸ் இரண்டு ஊரும் பிரிய கூடாது என்று தான் நினைத்தார். ஆனால் சில மாகாணசபை உறுப்பினர்கள் தான் பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள். ஹரீஸ் இம்முறைதான் நன்றாக சிந்தித்துள்ளார். இதை கல்முனை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஹரீஸ் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  jes Tuesday, 11 October 2011 11:46 PM

  சிராஸ் நானும் சாயிந்தமருதுதான் , உங்கள் வரவு மிச்சம் சந்தோசம் , ஆனால் பரந்துபட்ட சிந்தனையில் நிசாம் காரியப்பருடன் பிரதி மேயராக இருந்து, உங்களை கொண்டுவந்த ஜமீளுடன் உடன்பட்டு நல்ல டீமாக வேலை செய்யலாமே , நமது கல்முனை முன்னேறுமே , அல்லது குறுகிய சிந்தனைதனா?

  Reply : 0       0

  Nafeel Tuesday, 11 October 2011 11:53 PM

  கொழும்பில் ஒரு ஆட்டோ சாரதி mayor ஆக இருந்த போது சிராஸ் தம்பி இருந்தா என்ன?

  Reply : 0       0

  nalan virumpi Thursday, 13 October 2011 04:59 AM

  இதுவரையில் மேயர் பெறப்படவுமில்லை பெறப்பட போவதுமில்லை. ஏனெனில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று பெறப்படாத மேயர் அதிகுறைந்த வாக்கிலா பெறுவார். சிராஸ் விட்டுக் கொடுப்பது பெருந்தன்மைதான். ஆனால் இதுவரையும் விட்டுக் கொடுத்துத்தான் இருந்தோம். இம்முறை அவர்கள்தான் விட்டுக்கொடுக்க வேண்டும். அவர்களால் விட்டுக் கொடுக்க முடியாததால் பெருந்தன்மை யாருக்கென்பது தெரியும்.

  Reply : 0       0

  meenavan Wednesday, 12 October 2011 12:34 AM

  ஒத்துழைப்பு என்பது உள்ளத்திளிருந்தா? உதட்டளவிலா? கட்சி பேதமின்றி கல்முனை தொகுதியை கட்டி எழுப்புவதாக கூறியுள்ளீர்கள். சபாஸ்' உங்களின் வெற்றியின் பின்புலமான ஹரிஸ் எந்த அளவு ஆதரவு வழங்குவார்?

  Reply : 0       0

  ruzny Wednesday, 12 October 2011 12:51 AM

  நீங்கள் கட்சி எடுக்கும் முடிவை ஏற்பதற்கு முதல் ஒரு மக்கள் சந்திப்பை நடத்தி மக்களிடம் முடிவை கேட்க வேண்டும் ..ஏன் என்றால் நானும் உங்களுக்கு வாக்களித்த ஒருவன் .. நிசாம் அவர்கள் மேயர் பதவியை எடுக்கமாட்டார் என்று நம்புகின்றேன் .. அவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோர்த்தால் கூட பதவி எடுக்கமாட்டேன் என்று கூறியவர்.....

  Reply : 0       0

  RIYAZATH Wednesday, 12 October 2011 03:06 AM

  விட்டுகொடுங்க சார். விட்டுகொடுத்தா வெற்றி தானே சார். இது பள்ளிகூடத்துலே படிச்ச பாடம்.

  Reply : 0       0

  சிறாஜ் Wednesday, 12 October 2011 03:33 AM

  சிராஸ் யோசனையுடன் நடந்து கொள்ளுங்கள். உங்களை மக்களும் கட்சியும் மதிக்க நடங்கள். அதுதான் இன்றைய தேவை.

  Reply : 0       0

  jafir Wednesday, 12 October 2011 04:51 AM

  சிராஸ் ஒரு இளம் சிந்தனையாளர். இவர் நல்ல துடிப்புள்ள ஒருவர். இவர் மேயர் ஆனால் எமது ஊருக்கு புகழ். ஆனால் அரசியலுக்கு இளமை மட்டும் போதாது, அனுபவமும் தேவை.

  Reply : 0       0

  yood Wednesday, 12 October 2011 05:26 AM

  சிராஸ் உங்களுக்கு ஒட்டு போட்டது மக்கள் நீங்கள் இதை பத்தி மக்களிடம் முடிவு எடுங்கள். நல்லதை நினையுங்கள் நல்லதை செய்யுங்கள் சிராஸ்.

  Reply : 0       0

  yaar Wednesday, 12 October 2011 06:00 AM

  செலவழித்ததை உழைக்க மேயர் பதவி நல்லம்.

  Reply : 0       0

  faris Wednesday, 12 October 2011 02:50 PM

  சிராஸ் நீங்க விட்டுக்கொடுங்க அல்லா ungalodu.

  Reply : 0       0

  shamil Wednesday, 12 October 2011 04:14 PM

  மக்களின் தீர்ப்பே இறுதியானது, அப்படியானால் எதற்கப்பா தேர்தல்? கட்சி மட்டும் கேட்டிருகேலமே ?

  Reply : 0       0

  Rihaan Wednesday, 12 October 2011 04:58 PM

  Mr. RIYAZATH, என்ன பூ .... நாங்க விட்டு கொடுக்கணும்.....? ? ?

  Reply : 0       0

  Amjath ULM Wednesday, 12 October 2011 05:20 PM

  வாழ்த்துக்கள் சிராஸ்,
  அதிகம் மக்களால் விரும்பப்பட்டவர் என்பது போல்,
  குறுப்பிட்ட காலத்துக்காவது (மூத்த, கட்சியை பலசந்தற்பங்களில் சதிகாரர்களிடமிருந்து காத்த) நிசாம் கரியப்பரிற்கு விட்டுக்கொடுத்து சிறந்த உள்ளம் படைத்தவன் என்ற பட்டத்தையும் வென்று, கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களிடமும் நற்பெயரை பெருவீர்களேயானால் உங்களின் வளர்ச்சியை உங்களாலேய தடுக்கமுடியாது.....
  நல்ல முடிவாய் எடுங்கள்
  நன்றி....
  அம்ஜத் ULM

  Reply : 0       0

  IQRA JALAL Wednesday, 12 October 2011 07:37 PM

  எல்லாம் அவன் செயல். இதுலதான் தலைவர்ர திறமைய பார்க்கலாம்.

  Reply : 0       0

  உங்க நன்பன் Wednesday, 12 October 2011 07:51 PM

  உங்கள் கருத்துக்கள் வரவேற்க தக்கது....அனாலும் கட்சி முடிவுதான் மேயர் நியமன முடிவை தீர்மானிக்கும் என்றால் ஏன் இந்த ஜனநாயக தேர்தல்.... கட்சி ஏன் ஆரம்பத்தில் மக்களுக்கு தெளிவான அறிவிப்பை அறிவிக்க வில்லை???

  வாக்கு வங்கியை நிரப்புவதற்காக மட்டும் என்ற உள்நோக்கோடு வங்குரோத்து அரசியல் நடத்துவது எவ்வளவு கேவலம்.... முதன்மை வேட்பாளர் என்று கழத்தில் இறங்கியவர் அதனை நிருபித்து காட்டி மேயர் என்ற ஆசனத்துக்கு வந்திருக்க வேண்டும்.
  விட்டுக்கொடுப்பு என்பதும் வரவேற்க தக்கது... ஆனால் இந்த மூத்த நானா நிசாம் காரியப்பர் தனது தோல்வியை ஏற்று ஜனநாயகத்துக்கு மதிப்பளிப்பாரேயனால் அதுவே வென்றவநுக்கும்இ வாக்களித்த மக்களுக்கும் மன சாந்தியாக இருக்கும்..... விதண்டவாத காழ்ப்புணர்ச்சி உங்களுக்கு வேண்டாம்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--