2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பயிர் நாற்றுக்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)
சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படும் நிலையில் தேசிய சமூக அபிவிருத்தி மையமும், கல்முனைக்குடி சமுர்த்தி வலய அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பயிர் நாற்றுக்கள், விதைகள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலய ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் திவிநெகும வீட்டுத்தோட்டம் மனைப்பொருளாதாரம் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டச் செய்கை, விலங்கு வளர்ப்பு தொடர்பான அறிவூட்டல் மேற்கொள்ளப்பட்டதுடன், பயிர்நாற்றுக்களும், விதைகளும் விநியோகிக்கப்பட்டன.

தேசிய சமூக அபிவிருத்தி மையத்தின் தலைவரும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருமாகிய யு.எல். அப்துல் சமட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் அதிதிகளாக  சமுர்த்தி தலைமைக்காரியாலய முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ், கல்முனைக்குடி சமுர்த்தி வங்கி வலய முகாமையாளர் ஏ.சி. அன்வர் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வளவாளர்களாக கால்நடை வைத்திய நிபுணர் டாக்டர் ஏ.எம். ஜிப்ரி, விவசாய போதனா ஆசிரியர்களான எஸ்.சுரேஷ், ஏ.நிகார் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--