2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

மீனவர்களுக்கான நடமாடும் சேவை

Kogilavani   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் கல்முனை மாவட்ட அலுவலகம் இன்று புதன்கிழமை அட்டாளைச்சேனை மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் மீனவர்களுக்கான நடமாடும் சேவைகளை நடத்தியது.

இதன்போது, கடற்றொழில் கலன்களை பதிவு செய்தல் மற்றும் பதிவுகளைப் புதுப்பித்தல்,  படகுகளுக்கான தொழிற்பாட்டு அனுமதிப்பத்திரம் வழங்கல், கலன்களுக்கான உரிமை மாற்றல், மீனவர்களுக்கான காப்புறுதி மற்றும் ஓய்வூதியத் திட்டங்களை மேற்கொள்தல், மீனவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்குதல் உள்ளிட்ட பல சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், புதிய மீனவர் அமைப்புக்களை உருவாக்குதல் மற்றும் அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளும் இடம்பெற்றன.

இதேவேளை, 100 கடற்றொழில் கலங்களுக்கான பதிவுப் புத்தகங்களும், 50 பேருக்கான கடற்றொழில் ஓய்வூதியப் புத்தகங்களும், மீனவர்களுக்கான அடையாள அட்டைகளும் அதே இடத்தில் அதிகாரிகளால் உரிய பயனாகளிடம் வழங்கப்பட்டன.

மேற்படி நடமாடும் சேவைகளில், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் கல்முனை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே. செல்வராஜா, ஜி.என். ஜெயக்கொடி, மாவட்ட கடற்றொழில் பரிசோதகர்களான எம். சுலைமான், ஐ.கே.எம். சம்சுதீன், ஈ தேவராஜா மற்றும் அட்டாளைச்சேனைப் பிரதேச கடற்றொழில் பரிசோதகர் எம்.எஸ். மனாசிர் ஷெரீப் ஆகியோரும் திணைக்களத்தின் பிரதேச கடற்றொழில் பரிசோதகர்களும் கலந்து கொண்டு மீனவர்களுக்கான சேவைகளை வழங்கினர்.                                                                                                                                                                                                                                                                        
                                       
                                                             

 


  Comments - 0

  • meenavan Wednesday, 19 October 2011 10:16 PM

    இந்த நடமாடும் சேவை அம்பாறை மாவட்ட ஏனைய கரையோர பிரதேசங்களிலும் நடைபெறுமா? மீனவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X