2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

அம்பாறையில் பெருமழை: தாழ்நில பிரதேசங்களில் வெள்ளம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 22 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

தற்போது பெய்து வரும் பெருமழை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ள நீரினால் நிறம்பியுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாயக் காணிகள் நீரில் மூழ்கியுள்ளன.

அத்துடன், சம்மாந்துறையூடாக மண்டூர் செல்லும் பிரதான வீதியிலுள்ள வழுக்காமடு கோஸ்வே பிரதேசத்தில் பிரதான வீதியை ஊடறுத்து ஒரு அடிக்கு மேல் வெள்ள நீர் பாய்ந்து செல்கின்றது.

மேலும் மழை தொடரும் சந்தர்ப்பத்தில் அப்பாதையூடான போக்குவரத்து தடைப்படும் அபாயம் உள்ளது. அதுமாத்திரமன்றி கிட்டங்கி தாம்போதி, மாவடிப்பள்ளி தாம்போதி என்பவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0

  • mohamed shiran Wednesday, 23 November 2011 03:46 PM

    வழமையாக நடக்கிறதுதான்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .