2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

விசேட ஆற்றல் உடையவர்களுக்கான உபகரணங்கள் கையளிப்பு

Super User   / 2011 நவம்பர் 22 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை பிரதேசத்தில் விசேட ஆற்றல் உடையவர்களுக்காக மேற்கொள்ளப்படும் வாழ்வாதார உதவிகள் தொடர்பான வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரெங்கின் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டார்.

இதில் கல்முனை பிரதேச செயலாளர்களான எம்.எம்.நௌபல், கே.லெவநாதன், மகளிர் அபிவிருத்தி நிலையம், விசேட ஆற்றலுடையவர்களுக்கான அபிவிருத்தி வலையமைப்பு, சைட் சேவர் வலையமைப்பு ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும கலந்துகொண்டனர்.

இதன்போது, விசேட ஆற்றலுடையவர்களுக்கான இலகுபடுத்தல் உபகரணங்களை உயர் ஸ்தானிகர் கையளித்தார்.
இத்திட்டம் கல்முனை மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • ummpa Wednesday, 23 November 2011 02:30 PM

    மற்றவங்க பேசிகொண்டே இருக்கட்டும். இங்குதான் நடவடிக்கை உதவிக் கரமாகின்றது . கல்முனை மா நகரசபை ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .