2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் அரசியல் பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 23 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அரசியல் பயிற்சிப்பட்டறையொன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் நடத்தப்பட்டது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சோ.புஸ்பராஜா தலைமையில் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இப்பயிற்சிப்பட்டறையில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளரும் கிழக்கு மாகாண முதல்வரின் பிரத்தியேக செயலாளருமான ஆசாத் மௌலானா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உபசெயலாளரும் கிழக்கு மாகாண முதல்வரின் ஊடகச் செயலாளருமான ஆ.தேவராஜா, தமிழரசு கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆலையடிவேம்பு பிரதேசசபை உபதவிசாளர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேசசபை உறுப்பினர், நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0

 • UMMPA Wednesday, 23 November 2011 08:41 PM

  நமக்கோ இன்றைய தேவை நமது மக்களுக்கு முடியுமானவரை உதவியும் அவர்களின் எதிர்கால முன்னேற்றத்துக்கு வழிகாட்டல்தான். இது நடைபெறும்போது தானாகவே அரசியல் புரிந்துவிடும். எனவே நாங்களும் உயர்ந்துவிடுவோம் நீங்களும் தொடந்தும் இப்படி முதலமைச்சராக இருக்கலாம்.

  Reply : 0       0

  mattakkalappaan Thursday, 24 November 2011 04:40 AM

  arasiyala nammada aatkkal padippikkango.................

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X