2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக துண்டுப் பிரசுர விநியோகம்

Super User   / 2011 நவம்பர் 27 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

மக்கள் சுமையை அதிகதித்துள்ள 2012ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான  துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று     ஞாயிற்றுக்கிழமை மக்கள் விடுதலை முன்னணியினால் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் முதற் கட்டமாக மக்களி விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஸந்த பியதிஸ்ஸ தலைமையில்  அம்பாறையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் மக்கள் விடுதலை முன்னணியின் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டு மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கினார்கள்.

அம்பாறை பஸ் தரிப்பு நிலையம், வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுச் சந்தை உள்ளிட்ட பல இடங்களிலுள்ள மக்களுக்கு இத்துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0

  • manam Monday, 28 November 2011 07:18 PM

    இந்த வரவு செலவு திட்டம் பணக்கரர்களுக்கும் தொழிலதிபர்களுக்கு மட்டும் than சரி .மற்ற கஷ்டப்பட்டு உழைக்கும் ஏழை மக்களுக்கு ரொம்ப கஷ்டம். இந்த அரசாங்கம் ஏழை மக்களை நினைக்காமல் அவர்களுக்கு ஏற்றவாறு என்னவோ சிங்கப்பூர் மாதிரி நினைக்குது. நினைப்பு இருக்கட்டும் நம்ம நாடு அந்த அளவுக்கு இன்னும் அபிவிருத்தி காணல்ல. அதற்காக வேண்டி வெளி நாட்ல கடன வங்கி ரோடு அபோட்டு யாருக்கு அந்த காசு போஹுது இது எனது கேள்வி ? அடுத்தது இந்த அரசாங்கம் என்ன எழுதினாலும் ஏழைகள் இந்த நாட்டில் வாழ்கிறார்கள் என்ற எண்ணம் தேவை......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .