Suganthini Ratnam / 2011 நவம்பர் 29 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
1997ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞானபீடம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரையில் எந்தவொரு நிரந்தர அபிவிருத்திகளோ, பல்கலைக்கழகத்துக்கு தேவையான கட்டிடங்களோ மேற்கொள்ளப்படாமலுள்ளது. இலங்கை நெல் சந்தைப்படுத்தும் சபையினால் அரிசி ஆலைக்காக உருவாக்கப்பட்ட கட்டிடங்களிலேயே உள்ளக மாற்றங்களை செய்து இன்றுவரையில் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞானபீடம் இயங்கி வருகின்றதென இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் தெரிவித்தார்.
இதனால் இப்பல்கலைக்கழகத்தின் எதிர்காலம் தொடர்பாக இப்பிராந்தியத்திலுள்ள பொதுநல அமைப்புக்கள், பொதுமக்கள், பழைய மாணவர்கள் மத்தியில் சந்தேகங்களும் அச்சமும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞானபீடத்தில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த காலங்களில் இப்பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது விசேடமாக சம்மாந்துறையிலுள்ள பிரயோக விஞ்ஞானபீடத்தின் அபிவிருத்திக்காகவும் பண ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
17 minute ago
29 minute ago
34 minute ago
41 minute ago
meenavan Tuesday, 29 November 2011 04:45 PM
1997 ம் ஆண்டின் எந்தவொரு நிரந்தர அபிவிருத்தியும் இல்லையென்றால், சுனாமி அனர்த்தத்தின் பின்னர் (2004) எத்தனையோ N.G.O.க்கள் கட்டுமான பணிகளை செய்வதற்கான நிதிகளுடன் அலைந்தன.தென் கிழக்கு பல்கலைகழகத்திலும் N.G.O. நிதி பயன்பட்டதை உப வேந்தர் அறிவாரோ?
Reply : 0 0
பழைய மாணவன் Wednesday, 30 November 2011 04:22 PM
அனைத்து பீடங்களும் ஒரு இடத்திற்கு கொண்டு வரப்படுமானால் இந்த நிலை வராது. வளங்கள் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கும். அதற்கு பிரதேச வாதம் இடம் கொடுக்காதே !!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
29 minute ago
34 minute ago
41 minute ago